Friday, July 15, 2011

Newyork experience--4

லிபர்டி அம்மாவைப் பார்த்துவிட்டுத் திரும்ப படகில் ஏறி நியூயார்க் வந்தோம்.
இன்னொரு வலி மாத்திரை உள்ளே போனது..
கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் டாக்சி பிடித்து டைம்ஸ்
ஸ்குவேர்
வந்தோம்.
முதல் திட்டப்படி ராக்பெல்லர் டவர் போவதும் தள்ளிவைக்கப் பட்டது. அதற்குப் பதில் டைம்ஸ் ச்குவேரிலேயே இரண்டு மணிநேரம் உட்கார்ந்து பொழுது போக்கினோம். போக்கவில்லை நேரம் ஓடிவிட்டது:)
மெல்ல மெல்ல சந்தோஷக் கூட்டத்தின் ஆரவாரம்
அதிகm
ஆனதும் அங்கிருந்து நகர்ந்தோம்.
ஒரு டாலருக்கு ஆட
ரெடியாக இருந்தாள் ஒரு பெண். விளம்பரத்துக்காக கட்டிப்பிடி வைத்தியம் செய்ய தயாராக இருந்தார் மற்றொருவர்.
சிங்கம் மாட்டிக் கொண்டது ஒரு பெண்ணிடம்.அரைகுறை ஆடையுடன் பேசுவதற்கு மட்டும் ஆசைப் பட்ட அந்த இளம் பெண்ணிடமிருந்து தப்ப அவர் பட்ட பாடு
அய்யடான்னு போச்சு எங்களுக்கு.
மாப்பிள்ளைக்கு மாமனாரைக் கிண்டல் செய்யத் தோதாக அமைந்தது.
சிங்கம் ஓடி அன்றுதான் பார்த்தேன்.:)
அங்கிருந்து சப்வேக்குள் நுழைந்தோம்.
அதுவோ நகரத்துக்கு அடியே ஒரு நகரமாக இயங்கிக் கொண்டு இருந்தது.
மேலே என்னவெல்லாம் இருக்கிறதோ அதைவிடப் பன்மடங்கு சுத்தமாகப் பலப்பல கடைகள். நாட்டிய அரங்குகள். ஸ்கேட்டிங் ரின்க்
உணவகங்கள்.! வியப்புத் தாங்க முடியவில்லை. இது எவ்வாறு சாத்தியமானது.?
கூகிலாரைத் தான் கேட்கவேண்டும்.
ஊன்றி ஊன்றி நடந்து இனி ஒரு எட்டு கூட எடுத்துவைக்க முடியாது என்ற நிலையில்
பீட்சா கடையொன்றில் நுழைந்தோம்.
எனக்குத் தேவையான பச்சை
காய்கறிகளையும் ஒரு தயிர்க் கோப்பையையும் எடுத்துக் கொண்டேன்.
மற்றவர்கள் அவரவருக்குப் பிடித்ததை ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்.
அவர்களுக்கு மேலும் சுற்றிவர ஆசைதான்.
என்னுடைய தூங்கும் நேரம் (பத்துமணி) வந்துவிட்டதால் என் விருப்பத்தைதட்டாமல் மாடிசன்
ஸ்குவேர் ரயில் நிலையத்துக்கு வந்தோம். அங்கே நுவேர்க்(நன்றி ஸ்ரீனிவாச கோபாலன்)
நிலையத்துக்கு
ரயில் பிடித்து,ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.
வயிறு சங்கடம் செய்கிறதே. நாளைப் பொழுது நல்ல பொழுதாக இருக்கட்டும்
தாயே புவனேஸ்வரி என்று நினைத்தபடி உறங்கப் போனேன்.
 
அடுத்த நாள் காலையில்
எல்லோரும் எழுந்திருக்கவே ஆறரை மணி யாகி விட்டது. கீழே போய் இலவச காலை உணவாக ரொட்டித்துண்டுகளையும் ,பழங்களையும் உள்ளே தள்ளிவிட்டு,அங்கேயி இருந்த மடிக்கணினியில் அரை மணிநேரம் மெயில் பார்த்துவிட்டு
வந்ந்தேன்.
சின்னத்துக்கு முழங்கால் வரை பாண்ட் வேண்டும் இடுப்பு வரை சட்டை வேணும்,.
எம்ஜிஆரைப் பார்த்திருப்பானோ:)
அதை அவன் அம்மா வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு,
பெரியவனை,''புதிய மனிதா பூமிக்கு வா' பாட்டிலிருந்து வெளிக் கொண்டுவந்து(காதில ஹெட்செட்
போட்டால் அவனுக்கு நாங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டோம்)!கிளம்பி நுவேர்க் ஸ்டேஷன் வந்ஹோம் .அன்று அங்கு இருந்த அம்மா, எங்களுடைய பணச் செலவை மிச்சம் செய்ய அறிவுரைகள் பல வழங்கினார்.
'வி டூ யு வான்ட் டு ஸ்பென்ட் சோ மச் ஆன்
டிக்கெட்ஸ் மான்?
'என்று கேட்டுவிட்டு எங்களுக்கு உண்டான சலுகைகளைச் சொல்லி
இருபது டாலர் மிச்சம் செய்து வைத்தார்.
அந்த அன்புக்கு நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம்.
பென் ஸ்டேஷனில் இறங்கியதுமே வயிற்றைக் கலக்கியது.
வாய்வரை ஒரு உமட்டல்.
நாங்கள் இருந்ததோ ஸ்டேஷன் கே மார்ட் கடை. பெண்ணிடம் அவசரமாகச் சொல்லிவிட்டு வெளியே வந்து ரெஸ்ட்ரூம் தேடினால் எங்கே என்றே தெரியவில்லை. சரிதான் புதுவித அவமானம் இங்கே நடக்கப்போகிறது. என்ற சோகம் என்னைப் பற்றிக் கொண்டது. அதற்கும் மருந்துக் கடைப் பெண் என் முகத்தைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக வாஷிங் இருக்கும் இடத்திற்கு
அழைத்துப் போனாள். அங்கே போனதுதான் தெரியும்.அதுவரை கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார். போட்டிருந்த உடையெல்லாம் திட்டுத் திட்டாகக் கறை.
அதற்குள் விஷயமறிந்த பெண் அந்த இடத்திற்கே வந்துவிட்டால். அவசரமாக டிஷ்யூக்கள்,கேட்ட நாற்றத்தைப் போக்க வாசனைத் திரவியம், எல்லாம் கொடுவந்து அந்த அறையிளியே ஒரு நாற்காலியில் உட்காரவைத்து
முகமெல்லாம் துடைத்தாள். ஏம்மா என்ன ஒத்துக்கலை உனக்கு.
ஏன் இப்படி வாந்தி வந்தது என்றால் 'என்னவென்று சொல்வதம்மானு பாடலாமான்னு'' யோசனை வந்தது. எடுத்துக் கொண்ட மாத்திரைகள் வயிற்றில் புகுந்து விளையாடி இருக்கன்றன.
அந்த ஒரு நிமிடம் சனிப்பெயர்ச்சியோ குருப் பெயர்ச்சியோ நடந்ததோ.என்னவோ தெரியவில்லை. எப்படியோ யார் கண்ணிலும் படாமல் வாஷ் ரூம் வரை கொண்டுவிட்ட அந்தப் பெண்ணுக்கு நன்றி சொன்னேன். இன்று நடப்பதும் குறைவு, அட்வில் மாத்திரையும் குறைவு என்று தீர்மானித்து எதிரே இருந்த
மேசி'ஸ் கடைக்குள் நுழைந்தோம்.
புதிதாக ஒரு அங்கியும்
(லாங் குர்த்தா.) வாங்கிக் கொண்டோம். இதிலியே மூன்று மணி நேரம் கழிந்துவிட்டது/
இனி எம்பயர் ஸ்டேட் பில்டிங் தான் இலக்கு. அங்கே எலிவேட்டரில்
மேல போய் உட்கார்ந்து கொள்ளலாம்' என்று அங்கே போனால்
நிக்குதம்மா ஒரு மெயில் கியூ!
VIA   TIMES SQUARE
CLIMBING UP  THE  EMPIRE STATE BUILDING. LIFT IS ON THE 80TH FLOOR.
view from the Estate building  top.
new  peace building on the grounds of destruction
second floor  shops for souveneirs

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.:))

8 comments:

priya.r said...

ஒரு டாலருக்கு ஆட ரெடியாக இருந்தாள் ஒரு பெண். விளம்பரத்துக்காக கட்டிப்பிடி வைத்தியம் செய்ய தயாராக இருந்தார் மற்றொருவர்.சிங்கம் மாட்டிக் கொண்டது ஒரு பெண்ணிடம்.அரைகுறை ஆடையுடன் பேசுவதற்கு மட்டும் ஆசைப் பட்ட அந்த இளம் பெண்ணிடமிருந்து தப்ப அவர் பட்ட பாடு அய்யடான்னு போச்சு எங்களுக்கு.மாப்பிள்ளைக்கு மாமனாரைக் கிண்டல் செய்யத் தோதாக அமைந்தது.சிங்கம் ஓடி அன்றுதான் பார்த்தேன்.:)//நீங்க நகைச்சுவையோடு சொன்ன விதம் சிரிக்க வைத்தது :))))))))

பதிவுக்கு நன்றி மாமி !

geethasmbsvm6 said...

இவ்வளவு உடம்போட எப்படிப் படங்கள் எடுத்தீங்க?? என்னவோ போங்க?? வெளியே போனால் தயிர் சாதம் தவிர வேறே எதையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆனால் அங்கே உங்களுக்கு சாதம் வைக்கத் தோது இல்லை! :( பேசாமல் பிசைந்து எடுத்துப்போயிருக்கலாமோ??

geethasmbsvm6 said...

தொடர

திவாண்ணா said...

//சிங்கம் ஓடி அன்றுதான் பார்த்தேன்.:)//
எப்பவும் சிங்க நடைதானா?

வெறும் வயித்தில மாத்திரை சாப்டீங்களா?
:-(

//அதற்கும் மருந்துக் கடைப் பெண் என் முகத்தைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக வாஷிங் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போனாள். //

மனிதர்கள்!

வடுவூர் குமார் said...

Newyork Skyline - மனதை பிசைகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா.

கட்டாயம் பார்த்துக்கறேன். கவலை வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

நமக்கு இதெல்லாம் பழக்கம் இல்லையா. எங்க வீட்டுக்காரர் வெட்கப் பட்டு இப்பதான் பார்க்கிறேன்;௦௦) ப்ரியா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார். ஆமாம் நியூயார்க் ச்கைலைனில் அந்த இரண்டு கோபுரங்கள் இல்லாதது வருத்தமாகத் தான் இருக்கிறது. டாக்சி டிரைவர்கள் pechchil இன்னும் பயம் போகவில்லை